Monday, November 19, 2007

கன்னிப்பதிப்பு

அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கும் வணக்கம்,


"நிலாத்தூறல்" என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையத்துக்கு நான் புதியவன் இல்லை தான் ஆனால் வலைப்பதிவுகளில்இதுதான் என் கன்னிப்பதிப்பு. இந்த வலைதளத்தை எனது தாய்மொழியில் ஆரம்பித்ததைஎண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

நான் அவ்வப்போது அசைபோட்டு வந்த அந்த ஆதங்கங்களுக்கும் என் எண்ணத்தில் தோன்றும் எண்ணங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டுமென்று நினைத்ததோடு மட்டும் நின்றுவிடுவேன். ஆனால் அதற்கான காலம் இப்போது தான்கைகூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.

"பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம்" என்று தமிழனாய்ப் பிறந்து தரணியெங்கும்வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் இங்கே வலைப்பதிவுகளின் மூலம் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உறவுப்பாலத்தில்நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
என்னை இப்படி ஒரு முயற்சிக்கு தூண்டிய எனது நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவில்நன்றியை தெரிவித்துக் கொண்டு, தொடங்கிய இம் முயற்சி மேலும் சிறப்பாக அமையஎல்லாம் வல்ல நல்லூரான் திருவடியை பணிந்து எனது பதிவுகளை தொடங்குகிறேன்.
- நிஷா -

5 comments:

மாயா said...

வாழ்த்துக்கள் நிஷாந்தன் !

இந்த வருடம் உங்களைப் போன்ற சகோதரர்கள் நிறையப் பேர் தாயகத்திலிருந்து வலைபதிய வந்திருப்பது இன்னும் நிறையவே மகிழ்வை உண்டு பண்ணுகின்றது.

சலசலப்புக்களுக்கு முகம் கொடுக்காமல் உங்கள் பாதையில் பதிவுப் பணியைத் தொடருங்கள் . . .

சஞ்யே said...

வணக்கமுங்கோ!

ஒரு வழியா எழுத தொடங்கிவிட்டாய்!
தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

ஆமா எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். அதென்ன ஏதாவது ஒரு விசயத்தை முதற்தடவை தொடங்கும் போது அதற்கு முன்னால "கன்னி" என்றொரு சொல்லை சேர்க்கின்றீர்கள்? ஏன் முதற்பதிப்பை போடும்போது "கன்னிப்பதிப்பு" என்றுதான் போடவேண்டுமா? ஏன் "காளைப்பதிப்பு" என்று போட்டால் என்ன?

கன்னி என்றால் முதற் பதிப்புக்கு பிறகு கன்னி இல்லை. ஆனால் காளை முதற்பதிப்பக்குப் பிறகும் காளை என்னது தங்கள் கருத்தோ?

நல்லதோர் விளக்கத்தை உங்கள் பாணியில் எதிர்பார்க்கிறேன்.

நிஷாந்தன் said...

வாங்கோ சஞ்யே , மாயா உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி.
நல்ல கேள்வி சஞ்யே மிகவிரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

காண்டீபன் said...

வாங்கோ நிஷாந்தன்
வாழ்த்துக்கள்!
உங்களிடமிருந்து சிறந்த படைப்புக்களை எதிர் பார்க்கின்றேன்...

நிஷாந்தன் said...

நல்லது காண்டிபன் என்னால் இயன்றவரை தருகிறேன்.
உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி.

Custom Search