எனது நண்பர் ஒருவர் அண்மையில் எனக்கு மின்அஞ்சல் மூலம் java மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையை அனுப்பி இருந்தார், நீங்களும் பார்த்திட்டு ஒரு பின்னுட்டம் ஒன்றை மறக்காம போட்டுவிடுங்கோ..........
Saturday, March 8, 2008
இலங்கையில் உள்ள பெண் மென்பொருள் பொறியியல் வல்லுனர்கள்(Software Engineers) பற்றிய ஆய்வு ஒன்று!
வகை : ஜோக்
Monday, March 3, 2008
அலெக்சாண்டர் கிரகம் பெல்லின் (Alexander Graham Bell) பிறந்தநாள் இன்று!

ஒரே கம்பியில் ஆறேழு செய்திகளை அனுப்பக்கூடிய ஒத்திசைவான தந்திப்பொறி (Harmonic Telegraph) ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையை 1874 இல் கிரகம் பெல் பெற்றார். இத்தந்திப் பொறியில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழவும், அதை நீக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோது மின்சாரத்தின் வலிமைக்கும், காற்றின் ஒலி அலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அவர் கண்டறிந்தார். தனது உதவியாளர் தாமஸ் வாட்சன் என்ற மின் தொழில் வல்லுநரின் ஒத்துழைப்புடன் தனது ஆய்வைக் கிரகம் பெல் தொடர்ந்தார்; மனிதக் குரல்களை வேறோர் இடத்திற்கு அனுப்ப இயலும் என்ற முடிவுக்கு வந்தார்; இதுவே தொலைபேசியை வடிவமைப்பதற்கு வழி வகுத்தது.
தொலைபேசியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே (Elisha Grey) மற்றும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரும், ஸ்காட்லாந்து நாட்டவரான கிரகம் பெல், ஜெர்மனியின் பிலிப் ஆகிய நால்வரும் தனித்தனியே முனைந்து பணியாற்றி வந்தனர். இறுதியில் கிரகம் பெல் வெற்றி பெற்றார்; 1876 ஆம் ஆண்டு மார்ச்சு 10 ஆம் நாள் அமெரிக்க அரசு கிரகம் பெல் அவர்களின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கான காப்புரிமையை வழங்கியது. 1876 ஜூன் திங்களில் அமெரிக்காவிலுள்ள பிலெடெல்பியா என்னும் நகரில், அறிஞர்கள் முன்னிலையில் தொலைபேசி எவ்வாறு பணி புரிகிறது என்பதைச் செயல் முறையில் விளக்கிக் காட்டினார். அனைவரும் பாராட்டிப் போற்றினர்; கிரகம் பெல்லுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப் பெற்றது. அதே ஆண்டு செப்டெம்பர் திங்களில், ஸ்காட்லாந்தில் இரண்டாம் முறை, தனது கண்டுபிடிப்பைப் பற்றி செய்முறை விளக்கம் செய்தார். முதல் முறையாக நீண்ட தூரத் தொலைபேசிக் கம்பி இணைப்பு, குயின்ஸ் தியேட்டருக்கும் கேண்டர்பரிக்கும் இடையில் நிறுவப்பெற்றது. 1877 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் 'பெல் தொலைபேசி நிறுவனம் ' உருவாக்கப்பட்டது. கிரகம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது வயதில் பெரும் புகழுக்கும், செல்வத்திற்கும் சொந்தக்காரரானார். 1880 ஆம் ஆண்டு, பிரெஞ்சு அரசு அவருக்கு 50,000 பிராங்கு தொகையைப் பரிசாக அளித்தது; அப்பணத்தைக் கொண்டு வாஷிங்டனில் ஓர் ஆய்வுக்கூடத்தை பெல் நிறுவினார். ஒளிக்கற்றை வாயிலாக ஒலி அலைகளை அனுப்புவதற்கான ஆய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. கம்பியில்லாமலே செய்திகளை அனுப்புவதற்கான முயற்சியின் தொடக்கம் என இதனைக் கருதலாம். 1880 இல் கிரகம் பெல் ஒளிபேசியைக் (photophone) கண்டுபிடித்தார்; அவரது கருத்துப்படி இது தொலைபேசியை விடவும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும்.
1922 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 2 ஆம் நாள் அவர் மறைந்தபோது அமெரிக்காவில் எல்லாத் தொலைபேசிகளும் ஒரு நிமிட நேரம் நிறுத்தப்பட்டு அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று கிரகம் பெல்லுக்கு மரியாதை செலுத்துமுகமாக கூகிள் வெளியிட்ட தனது அடையாளச்சின்னத்தை(Logo) பாருங்கள்
கிரகம் பெல் கண்டுபிடித்த தொலைபேசியின் படங்களும் கீழே..
வகை : அறிவியல்
Friday, February 15, 2008
காதலர் தினத்திற்கு...
காதலர் தினத்திற்கு இணையத்தில் சில பிரபல வலைத்தளங்கள் தங்கள் முகப்புப்பக்கங்களில் ஏற்படுத்திய மாறுதல்களை பாருங்கள்
வகை : இணையம்
Saturday, December 29, 2007
ஆழ்கடலில் உள்ள எமது மூதாதையர் !...
பூமியில் முதன் முதலாகத் தோன்றிய உயிரினங்கள்ஒரேயொரு கலம் (Unicellular) கொண்ட மிகச்சிறியஉயிரினம்! இவை கடலில்தான் முதலில் தோன்றின.காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. முதலில் தோன்றிய ஐீவராசிகளின் படிப்படியான மாற்றங்களில், முதற்படிமாற்றம் மீன்களாக தான் இருக்கவேண்டும்என்று விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.
35 கோடி கடலில் வாழ்ந்த மீன்கள் படிப்படியாக தரைக்குமுன்னேறி ஈருடகவாழியாகி பின் ஊர்வன ஐீவராசிகளாகி அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பின் இறுதியில்மனிதன் தோன்றியிருக்க வேண்டும்மென்றும் விஞ்ஞானிகள்நம்புகின்றனர்.
அதுசம்பந்தமான ஓர் ஒளிப்படம் ஒன்று! நானும் எங்கேயோ எப்போதோ சுட்டதை நீங்களும் பாருங்களேன்........
வகை : அறிவியல்
Monday, November 19, 2007
கன்னிப்பதிப்பு
அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கும் வணக்கம்,
"நிலாத்தூறல்" என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இணையத்துக்கு நான் புதியவன் இல்லை தான் ஆனால் வலைப்பதிவுகளில்இதுதான் என் கன்னிப்பதிப்பு. இந்த வலைதளத்தை எனது தாய்மொழியில் ஆரம்பித்ததைஎண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
நான் அவ்வப்போது அசைபோட்டு வந்த அந்த ஆதங்கங்களுக்கும் என் எண்ணத்தில் தோன்றும் எண்ணங்களுக்கும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டுமென்று நினைத்ததோடு மட்டும் நின்றுவிடுவேன். ஆனால் அதற்கான காலம் இப்போது தான்கைகூடிவந்துள்ளதென நினைக்கிறேன்.
"பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம்" என்று தமிழனாய்ப் பிறந்து தரணியெங்கும்வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் இங்கே வலைப்பதிவுகளின் மூலம் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உறவுப்பாலத்தில்நானும் இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
என்னை இப்படி ஒரு முயற்சிக்கு தூண்டிய எனது நண்பர்கள் அனைவருக்கும் இப்பதிவில்நன்றியை தெரிவித்துக் கொண்டு, தொடங்கிய இம் முயற்சி மேலும் சிறப்பாக அமையஎல்லாம் வல்ல நல்லூரான் திருவடியை பணிந்து எனது பதிவுகளை தொடங்குகிறேன்.
வகை : அறிமுகம்
